பயிற்சியின்போது லவ்… பெற்றோருக்கு டிமிக்கு… 40 வயது பயிற்சியாளருடன் 20 வயது மாணவி ஓட்டம்

 

பயிற்சியின்போது லவ்… பெற்றோருக்கு டிமிக்கு… 40 வயது பயிற்சியாளருடன் 20 வயது மாணவி ஓட்டம்

பயிற்சிக்கு சென்ற மாணவி, பயிற்சியாளருடன் ஓட்டம் பிடித்துள்ளார். மகளை கண்டுபிடித்து தரக் கோரி காவல்துறையில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் மண்டலம் ராஜூலூ கண்டிரிகா கிராமத்தில் ஜீவாதார் என்ற தொண்டு நிறுவனம் உள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரபு சுந்தரம் என்பவர் அந்த ஆசிரமத்தின் நிர்வாகியாக உள்ளார். ஆரோக்கியான் என்ற மலையேற்றப் பயிற்சி நிறுவனத்தை சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பயிற்சியாளர் சீனிவாசன் (40) என்பவர் உடன் சேர்ந்து பிரபு சுந்தரம் நடத்தி வருகிறார். இந்த மலையேற்றப் பயிற்சிக்கு சென்னை அடுத்த திருமுல்லைவாயலைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரேயா 20, (பெயர் மாற்றம்) சென்றுள்ளார். அப்போது, மாணவி ஸ்ரேயாவுடன் பயிற்சியாளர் சீனிவாசனுக்கு காதல் மலர்ந்துள்ளது.

இந்த நிலையில், சீனிவாசனை திருணம் செய்து கொள்ள வீட்டிற்கு தெரியாமல் ஸ்ரேயா வெளியேறியுள்ளார். நாகலாபுரம் மண்டலம் சடுகுடு மடகு நீர்வீழ்ச்சி ஒட்டி அமைந்த ஆசிரமத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் சென்றுள்ளனர். ஆனால், வயது வித்தியாசத்தை காரணம் காட்டி சீனிவாசனுக்கு ஸ்ரேயாவை திருமணம் செய்து வைக்க ஆசிரம நிர்வாகி பிரபு சுந்தரம் மறுத்துவிட்டார். அதோடு, ஸ்ரேயாவின் குடும்பத்தினருக்கு பிரபு சுந்தரம் தகவல் கொடுத்துள்ளார். அங்கு சென்ற பெற்றோர், ஸ்ரேயாவை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

இதனிடையே, கடந்த 4ம் தேதி பெற்றோருக்கு போன் செய்த ஸ்ரேயா, பயிற்சியாளர் சீனிவாசனை திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து, திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் மாயமான மகளை கண்டுபிடித்து தருமாறு பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, ராஜூலூ கண்டிரிகா கிராமத்திற்குச் சென்று ஜீவாதார ஆசிரமத்தில் காவல்துறையினர் சோதனை செய்தனர். ஆனால் காதலர்கள் சிக்கவில்லை. அங்கிருந்த காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், பிரபு சுந்தரை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். காதல் விவகாரத்தை கடந்த முறை பெற்றோரிடம் தெரிவித்ததால் இந்த தடவை பிரபு சுந்தரத்தை காவல்துறையினரிடம் மாட்டிவிட்டு, காதல் ஜோடி மாயமாகியுள்ளது. இந்த காதல் ஜோடியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.