“ஒருநாள் மழைக்கே மிதக்கும் சென்னை” – போர்க்கால வேகத்தில் சென்னையைக் காத்திடுக : மு.க. ஸ்டாலின்

 

“ஒருநாள் மழைக்கே மிதக்கும் சென்னை” – போர்க்கால வேகத்தில் சென்னையைக் காத்திடுக : மு.க. ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பேரிடர் மீட்புப் படையை அழைத்து போர்க்கால வேகத்தில் சென்னையைக் காத்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“ஒருநாள் மழைக்கே மிதக்கும் சென்னை” – போர்க்கால வேகத்தில் சென்னையைக் காத்திடுக : மு.க. ஸ்டாலின்

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மீண்டும் ஒரு ‘டிசம்பர்-15’ அபாயம் வந்துவிடுமோ என மக்கள் அஞ்சும் அளவுக்கு ஒருநாள் மழைக்கே வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை!வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது என முன்கூட்டியே வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும், அதனை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சியைத் தயார்ப்படுத்தாத – ஊழலில் மட்டுமே கவனம் செலுத்தும் உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சர் திரு. பழனிசாமி ஆகியோரது அலட்சியமே இதற்குக் காரணம்! பருவமழையை சந்திக்கும் 750 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் அதில் வரலாறு காணாத முறைகேடுகள்.

கொரோனாவோ 2015 வெள்ளமோ, கனமழையோ எதையுமே எதிர்கொண்டு மக்களை காப்பாற்றும் அடிப்படை அருகதையை எடப்பாடி அரசு இழந்து நிற்கிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் குறைந்தபட்சம் கவுன்சிலர்களாவது துணைநின்று குறைகளை தீர்த்து வைப்பார்கள். எடப்பாடி அரசால் முடியவில்லை எனில், பேரிடர் மீட்புப் படையை அழைத்தேனும், போர்க்கால வேகத்தில் சென்னை மாநகரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்திடுக!” என்று பதிவிட்டுள்ளார்.