போலி நகையை அடகுவைத்து ரூ.24.77 லட்சம் மோசடி – 5 பேர் கைது

 

போலி நகையை அடகுவைத்து ரூ.24.77 லட்சம் மோசடி – 5 பேர் கைது

சென்னை

சென்னை பாடியில் தனியார் வங்கியில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.24.77 லட்சம் மோசடி செய்த 5 பேரை போலீசார் கைதுசெய்தனர். சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி, ஒலிம்பிக் காலனியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த 2019ஆம் ஆண்டு நகைக்கடன் குறித்து

போலி நகையை அடகுவைத்து ரூ.24.77 லட்சம் மோசடி – 5 பேர் கைது

அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது, 1,252 கிராம் போலி நகைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, போலி நகைகளை வைத்து ரூ.24.47 லட்சம் கடன்பெற்ற அதேபகுதியை சேர்ந்த சுரேஷ் (38), அக்பர் (46), முபாரக் (32), முகமதுகபீர் (32), நிஜாம்ராஜா(38) ஆகியோர் மீது, வங்கி மேலாளர், கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 5

போலி நகையை அடகுவைத்து ரூ.24.77 லட்சம் மோசடி – 5 பேர் கைது

பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு முகமது கபீர், வேறொரு வேலையாக வங்கிக்கு வந்துள்ளார். இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கொரட்டூர் காவல் நிலையத்துக்கு
தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, ஆய்வாளர் பொற்கொடி தலைமையில் போலீசார், சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்தை வைத்து முகமது கபீரை பிடித்தனர். பின்னர், அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் அன்று

போலி நகையை அடகுவைத்து ரூ.24.77 லட்சம் மோசடி – 5 பேர் கைது

மாலையே சுரேஷ், அக்பர், முபாரக், நிஜாம் ராஜா ஆகியாரையும் பிடித்தனர். பின்னர், 5 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்களுக்கு போலி நகைகளை கொடுத்து, அடகுவைக்க கூறியது அயப்பாக்கத்தை சேர்ந்த அன்சாரி என்பது தெரியவந்தது. இதனையடுத்து, 5 பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள அன்சாரியை தேடி வருகின்றனர்.