darbar
  • January
    20
    Monday

Main Area

Main



"Elbow Guard" டிசைனை சச்சினுக்கு மாற்ற ஆலோசனை சொன்ன சென்னை ரசிகர் கண்டுபிடிப்பு -"என் ஆலோசனையை சச்சின் கேட்டது எனக்கு பெருமை "என பெரம்பூர் பிரசாத்   பெருமிதம்   

சச்சின்
சச்சின்

சச்சின்டென்டுல்கர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி பேட்டியொன்றில் தான் இந்தியன் டீமில் விளையாடும்போது சென்னையில்   தன்னை சந்தித்த  ஒரு ஹோட்டல் ஊழியர்,"Elbow Guard" டிசைனில்   தான்  சில மாற்றங்களை செய்யவேண்டுமென ஆலோசனை சொன்னார் ,அவரின் ஆலோசனை படி நான் என் "Elbow Guard" டிசைனில்  மாற்றம் செய்து மிக சிறப்பாக விளையாடினேன் அந்த ரசிகரை நான் தேடுகிறேன் ,அவருக்காக என் கையொப்பமிட்ட ஆட்டோகிராஃபை பகிர்ந்துள்ளேன் ட்விட்டரில் என்று கூறினார் .

man

அந்த ரசிகரை பற்றி விசாரித்தபோது அவர் சென்னை பெரம்பூரை சேர்ந்த குருப்ரசாத் என்று தெரியவந்துள்ளது 
சச்சின் பேட்டி பற்றி குரு பிரசாத் ,"நான் ஒரு முறை தாஜ் ஹோட்டலில் சச்சினை சந்தித்து அவர் விளையாட்டின் "Elbow Guard" டிசைனில் மாற்றம் செய்ய  ஆலோசனையை சொன்னேன் ,அதன்படி அவர் மாற்றம் செய்து விளையாடியது எனக்கு பெருமை ,மேலும் அவரின் ஆட்டோகிராப்பை நான் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன் "என அவர் கூறினார் .

இதன் மூலம் சச்சின் தன் ரசிகரின் கருத்துகளை எந்த அளவு மதிக்கிறார் என தெரியவந்துள்ளது   ,இதுதான் அவரை  புகழ் உச்சிக்கு கொண்டு சென்றது என்றால் அது மிகையில்லை ..

2018 TopTamilNews. All rights reserved.