இனி மின்சார ரயில்களும் ஓடாது… முக்கிய அறிவிப்பு இதோ!

 

இனி மின்சார ரயில்களும் ஓடாது… முக்கிய அறிவிப்பு இதோ!

சென்னை மின்சார ரயில்கள் இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இனி மின்சார ரயில்களும் ஓடாது… முக்கிய அறிவிப்பு இதோ!

இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு காரணமாக சென்னை மின்சார ரயில்கள் இரவு 10 மணிக்கு மேல் இயக்கப்படாது என்றும் நாளை முதல் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பேருந்துகளை தொடர்ந்து ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை எந்த நிலையத்திலிருந்தும் ரயில்கள் இயக்கப்படாது என்றும் முழு ஊரடங்கான ஞாயிற்று கிழமைகளில் ரயில் ஓடும், ஆனால் நான்கில் ஒரு பங்கு அளவிலேயே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இனி மின்சார ரயில்களும் ஓடாது… முக்கிய அறிவிப்பு இதோ!

வார நாட்களில் 600க்கு பதில் 434 ரயில்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் 400க்கு பதில் 86 ரயில்கள் இயக்கப்படும்,முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே ரயில் இயக்கப்படும் என்று அறிவித்துள்ள தெற்கு ரயில்வே, ஞாயிற்றுக்கிழமைகளில் முன் களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே பயணிக்கலாம் என்றும் கூறியுள்ளது.