பெண்கள், குழந்தைகளுக்கு பிரச்னையா?- உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

 

பெண்கள், குழந்தைகளுக்கு பிரச்னையா?- உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் தெரிவிக்க வேண்டுமென்றால், 91502 50665 என்ற செல்போன் எண்ணில் பேசலாம் என்று அறிவித்துள்ளார் சென்னை துணை போலீஸ் கமிஷனர் ஜெயலட்சுமி.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு என்ற புதிய போலீஸ் அமைப்பு தமிழகம் முழுவதும் செயல்படுகிறது. அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இதன் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. மாநில அளவில் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஒருவர் இந்த பிரிவுக்கு தலைமை ஏற்று நடத்துகிறார். மாவட்ட அளவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையின் கீழ் செயல்படுகின்றன.

சென்னையை பொறுத்த மட்டில் துணை கமிஷனர் பொறுப்பில் இந்த அமைப்பு இயங்குகிறது. துணை கமிஷனர் ஜெயலட்சுமி இந்த பிரிவுக்கு தற்போது பொறுப்பு அதிகாரியாக உள்ளார். சென்னையில் இந்த அமைப்புக்கு 40 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை அம்மா ரோந்து வாகனம் என்று அழைக்கப்படுகிறது.

புகார்கள் ஏதேனும் வந்தால் இந்த ரோந்து வாகனங்களில் விரைந்து சென்று பெண் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் தெரிவிக்க வேண்டுமென்றால், 91502 50665 என்ற செல்போன் எண்ணில் பேசலாம் என்று அறிவித்துள்ளார் துணை கமிஷனர் ஜெயலட்சுமி.