தினகரன் வாபஸ்… சசிகலாவுக்கு பறந்த நீதிமன்ற நோட்டீஸ் – திடீர் பரபரப்பு!

தினகரன் வாபஸ்… சசிகலாவுக்கு பறந்த நீதிமன்ற நோட்டீஸ் – திடீர் பரபரப்பு!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவும் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தச் சமயத்தில் சொத்துக்குவிப்பு தீர்ப்பு வரவே, சசிகலா சிறைக்குச் சென்றார். அதற்கு முன் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்தார். சிறை சென்ற பின் அதிமுகடவுடன் அதிருப்தியில் இருந்த ஓபிஎஸ் இணைந்தார்.

தினகரன் வாபஸ்… சசிகலாவுக்கு பறந்த நீதிமன்ற நோட்டீஸ் – திடீர் பரபரப்பு!

இதையடுத்து 2017இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா, தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கொண்டுவரப்பட்டு முறையே ஓபிஎஸ்ஸும் எடப்பாடியும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலாவும் தினகரனும் வழக்கு தொடர்ந்தனர்.

தினகரன் வாபஸ்… சசிகலாவுக்கு பறந்த நீதிமன்ற நோட்டீஸ் – திடீர் பரபரப்பு!

தங்கள் இருவரையும் கட்சியின் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கட்சியின் வங்கி கணக்குகள் குறித்த விவரங்களையும், கட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களையும், அதிமுக தலைமைக்கழக மேலாளர் மகாலிங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

தினகரன் வாபஸ்… சசிகலாவுக்கு பறந்த நீதிமன்ற நோட்டீஸ் – திடீர் பரபரப்பு!

விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே நீதிமன்ற கட்டணமாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலுத்தும் வழக்குகளை மட்டுமே உயர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து சசிகலா, தினகரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

தினகரன் வாபஸ்… சசிகலாவுக்கு பறந்த நீதிமன்ற நோட்டீஸ் – திடீர் பரபரப்பு!

நீதிபதி ரவி முன்பு இவ்வழக்கு கடந்த முறை விசாரனைக்கு வந்தபோது, அமமுக என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருவதால், அதிமுகவிற்கு எதிரான வழக்கைக் கைவிடுவதாக தினகரன் தரப்பில் தெரிவிக்கபட்டது. இந்நிலையில் சசிகலா தொடர்ந்த வழக்கை நிராக்கக்கோரி அதிமுக நிர்வாகிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவிற்கு சசிகலா பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.