10 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுகொங்க! நீங்களும் போட்டுகொங்க…கெஞ்சும் சென்னை மாநகராட்சி

 

10 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுகொங்க! நீங்களும் போட்டுகொங்க…கெஞ்சும் சென்னை மாநகராட்சி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 300ற்கும் குறைவாக கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பாதிப்பு ஒரேநாளில் 2 ஆயிரத்த்தை தாண்டியுள்ளது. மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறையும், சென்னை மாநகரட்சியும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. ஒரு தெருவில் 3க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கும் பணிகளும் ஒரு பக்கம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அதுமட்டுமின்றி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் வீடுகளில் ஸ்டிக்கரும் ஒட்டப்படுகிறது.

இந்நிலையில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனாவுக்கு எதிரான தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். நாமும் நமக்கானவர்களும் நலமாய் வாழ தடுப்பூசி அவசியம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.