சென்னையில் அனைத்து கல்லூரி விடுதிகளிலும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு!

 

சென்னையில் அனைத்து கல்லூரி விடுதிகளிலும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு!

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் கடந்த 9ம் தேதி 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 444 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 87 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் நேற்று முன்தினம் வரை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்தது. தொடர்ந்து மேலும் 8 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அனைத்து கல்லூரி விடுதிகளிலும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு!

இதேபோல் அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருக்கும் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா பரவல் எதிரொலியாக சென்னையில் உள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.