வீட்டைவிட்டு வெளியே வந்த கொரோனா நோயாளிகளிடமிருந்து ரூ.58,000வசூல்

 

வீட்டைவிட்டு வெளியே வந்த கொரோனா நோயாளிகளிடமிருந்து ரூ.58,000வசூல்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நோயாளிகள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் அருகில் வசிப்பவர்கள் 044- 25384520 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது.

வீட்டைவிட்டு வெளியே வந்த கொரோனா நோயாளிகளிடமிருந்து ரூ.58,000வசூல்

இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் விதியை மீறி செயல்பட்டதாக 29 நபர்களிடம் இருந்து 2000 ரூபாய் வீதம் 58000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.