கொரோனாவில் இருந்து மீண்டவரை வீட்டில் தகரத்தால் அடைத்த ஊழியர்கள்!- சர்ச்சையில் சென்னை மாநகராட்சி

 

கொரோனாவில் இருந்து மீண்டவரை வீட்டில் தகரத்தால் அடைத்த ஊழியர்கள்!- சர்ச்சையில் சென்னை மாநகராட்சி

கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவரை வீட்டில் தனி அறையில் வைத்து தகரத்தை வைத்து சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அடைத்துள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இருந்தாலும் சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்தது. மாவட்டத்தில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் வாழ்ந்து வருவதால் தொற்று அதிகரிக்க ஆரம்பித்தது. இதையடுத்து, சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருந்து மக்கள் படையெடுத்தனர். இதனால் சென்னையில் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்தது. ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கு மேல் தொற்று பரவிய நிலையில் 900க்கு கீழ் குறைந்தது தொற்று. இதனிடையே, சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப ஆரம்பித்தனர். இதையடுத்து, கொரோனா தொற்று ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் நாளொன்றிக்கு சராசரியாக 6,000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சென்னை மற்றும் சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் மட்டுமே அதிக அளவில் தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், ஜுலை மாதம் முதல் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் கோவை, கடலூர், சேலம் மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையில், இந்த மூன்று மாவட்டங்களின் பங்கு மட்டும் 16 சதவிகிதமாகும்.

திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் வேகமும், சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் சற்று குறைந்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் வேகமும், சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் ஜுலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் சற்று குறைந்துள்ளது.

இதனிடையே, குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் குமார். இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். இந்தநிலையில், நகராட்சி அதிகாரிகள் அவரது வீட்டு கதவை முழுவதும் மூடும்படி இரும்பு தகரத்தை கொண்டு அடைத்துள்ளனர். அந்த வீட்டில் இதய நோயாளி உட்பட 4 பேர் வசிக்கும் நிலையில், ஜன்னல் வழியாக கூட பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெற முடியாத சூழல் உள்ளது. கொரோனா சிகிச்சை முடிந்து வந்த பின்னர் ஒட்டுமொத்த குடும்பமும் உணவு கிடைக்காதவறு முடக்கி வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள குமார் மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான உணவு வழங்கப்படும். அவரது குடும்பத்தில் உள்ள ஒருவர் மட்டும் குமாருக்கு பணிவிடை செய்ய அனுமதிக்கப்படுவார். குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாத வகையில்தான் கதவை தகரத்தை மூடியுள்ளோம்” என்கின்றனர்.