கொரோனா டெஸ்ட் எடுக்காமல் சிடி ஸ்கேன் – சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

 

கொரோனா டெஸ்ட் எடுக்காமல் சிடி ஸ்கேன் – சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டும் பாதிப்பு 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்ததாக இல்லை. ஆரம்பக் கட்டத்தில் சென்னையிலேயே பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில், தற்போது கோவை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பரிசோதனையை அதிகரித்ததாலும், கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதாலுமே பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

கொரோனா டெஸ்ட் எடுக்காமல் சிடி ஸ்கேன் – சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

எனினும், நோய்ப் பரவல் மீண்டும் அதிகரிக்காமல் இருக்க சென்னை மாநகராட்சி அனைத்துக் கட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஆர்டிபிசிஆர் பரிசோதனை இல்லாமல் சிடி ஸ்கேன் எடுக்கும் நோயாளிகளை அடையாளம் காண சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பாதிப்பின் அறிகுறி இருக்கும் பலர், சோதனை செய்து கொள்ளாமலேயே பாதிப்பை கண்டறிய சி.டி ஸ்கேன் எடுத்துக்கொள்கிறார்கள். அதனால், அவர்கள் பாதிக்கப்பட்ட விவரங்கள் சென்னை மாநகராட்சிக்கு தெரியப் படுத்தப்படாமல் இருக்கிறது.

இதன் காரணமாக, தனியார் ஆய்வகங்களில் சிடி ஸ்கேன் எடுக்கும் நோயாளிகளின் விவரங்களை மாநகராட்சிக்கு அளிக்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மார்பக ஸ்கேன் எடுக்கும் நபர்களின் விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என ஆய்வகங்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.