`பிரச்னை வேண்டாம்மா; புகாரை வாபஸ் வாங்குன்னு சொல்லிட்டாங்க!’- காதல் வலை விரித்த இன்ஜினீயரை தப்பவிட்ட கல்லூரி மாணவி

 

`பிரச்னை வேண்டாம்மா; புகாரை வாபஸ் வாங்குன்னு சொல்லிட்டாங்க!’- காதல் வலை விரித்த இன்ஜினீயரை தப்பவிட்ட கல்லூரி மாணவி

காதல் வலை விரித்த சென்னை மாநகராட்சி உதவி இன்ஜினீயருக்கு எதிரான புகாரை திடீரென வாபஸ் வாங்கியுள்ளார் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி. “பிரச்னை வேண்டாம் என்று வீட்டில் உள்ளவர்கள் சொன்னதால் புகாரை வாபஸ் பெற்றேன்” என்று மாணவி விளக்கம் அளித்துள்ளார்.

`பிரச்னை வேண்டாம்மா; புகாரை வாபஸ் வாங்குன்னு சொல்லிட்டாங்க!’- காதல் வலை விரித்த இன்ஜினீயரை தப்பவிட்ட கல்லூரி மாணவி

சென்னையில் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், வீடு வீடாக சென்று தன்னார்வலர்கள், தற்காலிக மாநகராட்சி ஊழியர்கள கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராயபுரம் மண்டலத்தில் உள்ள 60வது வார்டில் 48 தற்காலிக ஊழியர்களோடு மூன்று என்ஜிஓக்களை சேர்ந்தவர்களும் பணியில் அமர்த்தப்பட்டனர். ஒரே வீட்டுக்கு இவர்கள் அனைவரும் சென்றதால் தற்காலிக ஊழியர்கள் 20 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களோடு, கல்லூரி மாணவிக்கு காதல் வலை வீசிய உதவி இன்ஜினீயரும் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதோடு கல்லூரி மாணவியும் வேலையை இழந்தார். அவர் மூலம் உதவி இன்ஜினீயருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக மாணவிக்கு உதவி இன்ஜினீயர் பேசிய ஆடியோவை அந்தக் குழுவைச் சேர்ந்த சிலர் வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆடியோவில், நீ அழகாய் இருக்கிறாய். உன்னுடைய டிக் டாக் வீடியோக்களை பார்த்து ரசித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு உன்னை பார்த்திருந்தால் திருமதி கமலக்கண்ணன் ஆகியிருப்பாய். தான் யார் தெரியுமா? மாநகராட்சி ஏ.இ என்றால் போலீஸ் ஏ.சி மாதிரி. தான் மாதம் 78 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன். அப்படி என்றால் நீ எப்படி இருக்கலாம் நினைத்துக் கொள்” என முடிகிறது.

இதனிடயே, சம்பந்தப்பட்ட மாணவி, இன்ஜினீயருக்கு எதிராக கொடுத்த புகாரை காவல் நிலையத்தில் வாபஸ் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. காதல் வலை விரித்த உதவி இன்ஜினீயர், கொரோனா தடுப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ளார். மாநகராட்சி உயரதிகாரிகளால் பாராட்டப்பட்ட அவர், விரைவில் பதவி உயர்வும் வழங்கப்பட இருந்தது. அதே நேரத்தில் கொரோனா கணக்கெடுப்புப் பணியில் தற்காலிக பணியாளர்களை நியமிப்பதில் அரசியல் தலையீடு அதிகளவில் உள்ளது. தாங்கள் சேர்த்துவிட்டவர்களை எப்படிப் பணியிலிருந்து நீக்கலாம் எனக் கட்சியினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையே ஈகோவும் தலைதூக்கியுள்ளது. உதவி இன்ஜினீயருக்கு பிடிக்காதவர்களே இந்த ஆடியோவை அதிகளவில் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

`பிரச்னை வேண்டாம்மா; புகாரை வாபஸ் வாங்குன்னு சொல்லிட்டாங்க!’- காதல் வலை விரித்த இன்ஜினீயரை தப்பவிட்ட கல்லூரி மாணவி

இதனிடையே, `எனக்கு இதுவரை சஸ்பெண்ட் உத்தரவு வரவில்லை. உண்மையில் அந்த ஆடியோவில் இருக்கும் குரல் என்னுடையது அல்ல’ என்று கூறுகிறார் உதவி இன்ஜினீயர்.

“இந்த ஆடியோ வெளியானது பெரும் பிரச்னையை ஏற்படுத்திவிட்டது. எங்கள் வீட்டில் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்னை வேண்டாம் என்று கூறினர். இதனால் அந்தப் பிரச்னையை பேசி முடித்துவிட்டோம். காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன். எஃப்ஐஆர் போட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்’ என்கிறார் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி.