கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு!

 

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. நாளொன்றுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அதில், சென்னையில் மட்டுமே 2 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்புகள் பதிவாகிறது. இதனால் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நடமாடும் மருத்துவக் குழுக்கள், வீடு வீடாக கொரோனா பரிசோதனை என அதிரடியாக முன்களப் பணியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு!

கடந்த ஆண்டு பின்பற்றப்பட்டதைப் போன்று, இந்த ஆண்டும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றினால் பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வர முடியுமென சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் நாளுக்கு நாள் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மூன்று அடுக்கு படுக்கை வசதியை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா… சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி முடிவு!

சென்னையில் தற்போது அரசு மருத்துவமனைகளிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிப்பு குறைவாக இருக்கும் நோயாளிகளை சிறிய மருத்துவமனை அல்லது பள்ளி, கல்லூரிகளில் அனுமதிக்கவும் பாதிப்பு அதிகமாக இருக்கும் நோயாளிகளை ஆக்சிஜன் வசதி கொண்ட பெரிய மருத்துவமனைகளில் அனுமதிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அறிகுறி இல்லாதோரை கல்லூரிகளில் தனிமைப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருக்கும் பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் நிரம்பிவிட்டன. 1000க்கும் குறைவான படுக்கைகளே எஞ்சியிருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே, தற்போது மூன்று அடுக்கு படுக்கை வசதிகள் ஏற்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.