3 அடி இடைவெளி 6 அடியாக அதிகரிப்பு! இது என்னடா கொடுமையா இருக்கு!!

 

3 அடி இடைவெளி 6 அடியாக அதிகரிப்பு! இது என்னடா கொடுமையா இருக்கு!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உணவகங்கள், அழகு நிலையங்கள், ஆன்லைன் மூலம் உணவு வழங்கும் நிறுவனங்களின் உரிமையாளர்களுடனான கூட்டம் சென்னையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில், கொரோனாவை தடுக்க அரசின் வழிகாட்டுதல்களை அவசியம் கடைப்பிடிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தனிமனித இடைவெளியை கடைப்பித்து, முகக்கவசம் அணிய வேண்டும், கடைகளுக்கு வெளியே சானிடைசர் வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தினார்.

3 அடி இடைவெளி 6 அடியாக அதிகரிப்பு! இது என்னடா கொடுமையா இருக்கு!!

இதனை தொடர்ந்து கடைகளில் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் இடையே 3 அடி இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில் 6 அடியாக இடைவெளி அதிகரிக்கப்பட்டிருப்பதாக தொழில் நிறுவனங்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகளில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்யவேண்டும் என்றும், கடைகளில் குளிர்சாதனங்களை இயக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் நிபந்தனைகளை மீறும் கடைகளில் அபாரதத் தொகை வசூலிக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.