சென்னையில் நிவர் புயலால் உயிர் சேதம் ஏற்பட்டதா? ஆணையர் பிரகாஷ் விளக்கம்!

 

சென்னையில் நிவர் புயலால் உயிர் சேதம் ஏற்பட்டதா? ஆணையர் பிரகாஷ் விளக்கம்!

நிவர் புயல் பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சென்னையில் கடந்த 36 மணி நேரத்தில் மட்டுமே 23 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 1913 என்ற அவசர எண் மூலமாக 24 மணி நேரமும் புகார்கள் பெறப்பட்டது. மக்களிடம் இருந்து வந்த 132 புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி, ராம் நகர், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு நீர் தேங்கியிருப்பதால், நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் நிவர் புயலால் உயிர் சேதம் ஏற்பட்டதா? ஆணையர் பிரகாஷ் விளக்கம்!

கடந்த 6 ஆண்டுகளில் மட்டுமே 1000 கி.மீ தூரத்திற்கு வடிகால் கால்வாய் உருவாக்கப்பட்டதால், நீர் தேங்குவது தற்போது குறைந்துள்ளது. வெள்ளம் அச்சுறுத்தல் இல்லாத நகரமாக சென்னை விரைவில் மாறும். சென்னையில் இதுவரை 4000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அனைத்து நீர்நிலைகளையும் புனரமைக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை மக்களுக்காக 15 நடமாடும் மருத்துவ முகாம்களும் செயல்படுத்தப்பட்டன.

சென்னையில் நிவர் புயலால் உயிர் சேதம் ஏற்பட்டதா? ஆணையர் பிரகாஷ் விளக்கம்!

சென்னையில் பொதுமக்கள் வசிக்க தகுதியில்லாத 152 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்படியான நடவடிக்கையின் மூலமாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் நிவர் புயலால் உயிர் சேதமோ அல்லது பெரிய பொருட்கள் சேதமோ ஏற்படவில்லை” என தெரிவித்தார்.