‘சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை’ – ஆணையர் பிரகாஷ் பேட்டி

 

‘சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை’ – ஆணையர் பிரகாஷ் பேட்டி

மழை நீர் தேங்காமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” நிவர் மற்றும் புரெவி புயலால் சென்னையில் மழை நீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டதை போன்று மீண்டும் நிகழாத வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் நீர் தேங்காமல் தடுக்க திட்டமிட்டு வருகிறோம். சென்னையில் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் நீர் தான் சென்னையில் தேங்குகிறது” என தெரிவித்தார். மேலும், அதிக அளவில் பரிசோதனை மேற்கொண்டதால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்றும் கூறினார்.

‘சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை’ – ஆணையர் பிரகாஷ் பேட்டி

நிவர் மற்றும் புரெவி புயலின் போது தொடர் கனமழை பெய்ததால், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இடுப்பளவு தேங்கிய மழை நீரில், மக்கள் நடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவியது. பேருந்து ஓட்டுநர்களும் வாகன ஓட்டிகளும் மழை நீர் தேங்கியதால் கடும் அவதிக்குள்ளாகினர்.

‘சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை’ – ஆணையர் பிரகாஷ் பேட்டி

மழை நின்று 2 நாட்களுக்கு மேல் ஆகியும், மழை நீர் வடியாததால் இயந்திரங்களை கொண்டு வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இவ்வாறாக ஒவ்வொரு முறையும் கனமழை பெய்யும் போது சென்னை மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வரும் நிலையில், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆணையர் தெரிவித்திருக்கிறார்.