“இனி தகரம் அடிக்கமாட்டோம்,” -கழட்டி விட்ட சென்னை கார்ப்பரேஷன்

 

“இனி தகரம் அடிக்கமாட்டோம்,” -கழட்டி விட்ட சென்னை கார்ப்பரேஷன்

சென்னையில் கொரானா பரவலை தடுக்க பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தகரமடித்து தனிமைப்படுத்தும் முறைக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அந்த முறை கைவிடப்படுவதாக சுகாதார துறை கூறியுள்ளது .

“இனி தகரம் அடிக்கமாட்டோம்,” -கழட்டி விட்ட சென்னை கார்ப்பரேஷன்

சென்னையில் கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, ஒரு பகுதியில் வைரஸ் தொற்று ஒருவருக்கு வந்தாலே முன்பு அந்த பகுதி முழுவதும் தகரம் அடித்து அங்கு போக்கு வரத்து தடை செய்யப்பட்டது .பிறகு அந்த தெருவிற்கு மட்டும் தகரம் அடித்தார்கள் .பிறகு அந்த அபார்ட்மென்டுக்கு மட்டும் தகரம் அடித்தார்கள் .பிறகு அந்த வீட்டுக்கு மட்டும் தகரம் அடித்தார்கள் .இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து இப்போது தகரமடித்து தனிமைப்படுத்தும் முறையினை சென்னை கார்ப்பரேஷன் நிறுத்திவிட்டதாக சென்னை கார்ப்பரேஷன் கமிக்ஷனர் பிரகாஷ் கூறினார் ,
அது மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்தது வருவோரை அவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொள்ளலாமென்றும் ,பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிருந்து வருவோருக்கு அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென்றும் கூறினார் .இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் தகரம் அடித்து தனிமைப்படுத்தப்பட்டு அதனால ஏற்பட்ட மன உளைச்சலிருந்து தப்பித்தார்கள் என்று பாதிக்கப்பட்ட ஒருவர் கூறினார் .சென்ற வாரம் ஒருவரின் வீட்டில் இப்படி மாநகராட்சி அதிகாரிகள் தகரம் அடித்த விஷயம் மீடியாக்களில் வந்ததால் இப்படி இந்த தகரம் அடிக்கு முறையையே கைவிட்டதாக ஒரு தகவல் கூறுகிறது

“இனி தகரம் அடிக்கமாட்டோம்,” -கழட்டி விட்ட சென்னை கார்ப்பரேஷன்