“தும்மினாலே தூக்கிட்டு போய்டுவாங்க” -சுற்றிக்கொண்டேயிருக்கும் சுகாதார துறை

“தும்மினாலே தூக்கிட்டு போய்டுவாங்க” -சுற்றிக்கொண்டேயிருக்கும் சுகாதார துறை

சென்னை மாநகராட்சியில் கொரானாவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், சுகாதார துறை ஊழியர்களுக்கு கொரானா நோயாளிகளை கூட்டி வர டார்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் நோயாளிகளை பிடிக்க போராடி கொண்டிருக்கிறார்கள்.

“தும்மினாலே தூக்கிட்டு போய்டுவாங்க” -சுற்றிக்கொண்டேயிருக்கும் சுகாதார துறை

சென்னை மாநகராட்சியில் சுகாதார துறையில் கொரானா நோயாளிகளை கண்டுபிடிக்க கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது ,அதனால் அதிகாரிகளும் தங்களின் கடைமட்ட ஊழியர்களை தினமும் நோயாளிகளை கண்டுபிடித்து அழைத்து வர டார்ச்சர் செய்கிறார்களாம்.
இதனால் சுகாதார துறை ஊழியர்கள் பல இடங்களில் முகாமிட்டு பரிசோதனைகள் மேற்கொண்டு நோயாளிகளை அடையாளம் கண்டு வருகிறார்கள் .இந்நிலையில் பெயர் சொல்ல விரும்பாத ஒரு சுகாதார துரையின் மாநகராட்சி ஊழியர் ஒருவர் ,ஒரு நோயாளிக்கு சாப்பாடு சிலவு ,அவரின் வீட்டிற்கு தகரம் அடிக்கும் சிலவு .மற்றும் தங்கும் சிகிச்சை சிலவு என அதிகாரிகளால் 20000 ரூபாய் கணக்கெழுதப்படுகிறதாம் .அதனால்தான் அதிகாரிகள் ஊழியர்களிடம் ஒவ்வொருவரும் குறைந்தது 50 வைரஸ் நோயாளிகளை தினமும் கூட்டி வரவேண்டுமென டார்கெட் நிர்ணயித்து டார்ச்சர் செய்கிறார்களாம் .அதனால் பொது மக்கள் இனி பொது இடங்களில் தும்மினாலும் ,இருமினாலும் அக்கம் பக்கம் சுகாதார துறையினர் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு தும்ம வேண்டுமென ஒருவர் கூறினார்.

“தும்மினாலே தூக்கிட்டு போய்டுவாங்க” -சுற்றிக்கொண்டேயிருக்கும் சுகாதார துறை