சென்னையிலிருந்து பிறமாவட்டங்களுக்கு ஓடிய கொரோனா! ஒரு வாரத்தில் மும்மடங்கு பாதிப்பு

 

சென்னையிலிருந்து பிறமாவட்டங்களுக்கு ஓடிய கொரோனா! ஒரு வாரத்தில் மும்மடங்கு பாதிப்பு

சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு மும்மடங்காகியுள்ளது.

மதுரையில் மட்டுமே 493 லிருந்து 1073 ஆக அதிகரித்துள்ளது. 580 புதிய தொற்றுகள் கடந்த 7 நாட்களில் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதே போல் திருவண்ணாமலை மாவட்டத்தில் 816 லிருந்து 1372 ஆக உயர்ந்துள்ளது. மற்றும் வேலூர் 194 ல் இருந்து 580 ஆகவும், திருச்சி 179 ல் இருந்து 434 ஆகவும், தூத்துக்குடி 487 ல் இருந்து 732 , தேனி 164 ல் இருந்து 365 ஆகவும் மாறியுள்ளன. இதேபோல் ஜூன் 17 ஆம் தேதி முதல் ஜூன் 24 வரையிலான ஒரே வாரத்தில் தமிழகத்தின் மாவட்டங்களில் 3 மடங்கு தொற்று வேகமாக அதிகரித்துள்ளது.

சென்னையிலிருந்து பிறமாவட்டங்களுக்கு ஓடிய கொரோனா! ஒரு வாரத்தில் மும்மடங்கு பாதிப்பு

சரி பிற மாவட்டங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதே சரி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கவில்லையா என்ற கேள்வி எழும். ஆனால் அதுவும் இல்லை. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பகுதிகளில் பரவல் தொடர்ந்து அதிகரித்தவண்னம் உள்ளது. சென்னை தவிர பிறமாவட்டங்களில் ஏப்ரல் , மே மாதங்களில் இருந்தது போன்ற எச்சரிக்கை உணர்வு குறைந்துள்ளது. மேலும் கிராம பகுதிகளில் கொரோனா தொற்றின் வீரியம் குறித்த புரிதல் இல்லாததே வைரஸ் தொற்றுக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.