ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 1538 ஆக உயர்வு.. சென்னை பாதிப்பின் மண்டலவாரி பட்டியல் உள்ளே!

 

ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 1538 ஆக உயர்வு.. சென்னை பாதிப்பின் மண்டலவாரி பட்டியல் உள்ளே!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 12,000ஐ கடந்துள்ளது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8000ஐ எட்டியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு பெருமளவு உயர்ந்ததன் முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் பரவியது தான். கோயம்பேடு மார்க்கெட் மூலமாக மட்டுமே 3000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 1538 ஆக உயர்வு.. சென்னை பாதிப்பின் மண்டலவாரி பட்டியல் உள்ளே!

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மண்டலவாரியான விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 1538 பேரும் , தண்டையார்பேட்டையில் 773 பேரும் , திரு.வி.க நகரில் 976 பேரும் , அண்ணா நகரில் 662 பேரும் , தேனாம்பேட்டையில் 869 பேரும் , கோடம்பாக்கத்தில் 1192 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 8,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராயபுரம் மற்றும் கோடம்பாக்கத்தில் தான் அதிக அளவு கொரோனா தொற்று பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.