ராயபுரத்தில் 7 ஆயிரத்தை எட்டியது கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் தான் அதிக அளவு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதனால் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனிடையே சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னைவாசிகள் வேறு எங்கும் செல்ல முடியாத வண்ணம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை கொரோனா பாதிப்பின் மண்டலவாரி விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 7211 பேரும் , தண்டையார்பேட்டையில் 5989 பேரும், அண்ணா நகரில் 5397 பேரும் தேனாம்பேட்டையில் 5655 பேரும், கோடம்பாக்கத்தில் 5316 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்த பாதிப்பு 49,690 ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Most Popular

விருதுநகர் பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

விருதுநகரில் தியாகராஜபுரம் அருகில் ராஜகண்ணு பட்டாசு தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்ட பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கபட்டுள்ளனர். கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தை தொழிலாளர்களாகவும், கூலிக்கு அடிமைகளாகவும்...

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...

கொரோனா தொற்று உறுதியானதால் ஞானவேல்ராஜா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை!

பண மோசடி வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஆகஸ்ட் 27வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. 8 ஆம் தேதிக்குப் பின்னர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா...

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முழுமையாக அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ்...
Do NOT follow this link or you will be banned from the site!