ராயபுரத்தில் 6 ஆயிரத்தை எட்டியது கொரோனா பாதிப்பு.. கோரப்பிடியில் தலைநகர்!

 

ராயபுரத்தில் 6 ஆயிரத்தை எட்டியது கொரோனா பாதிப்பு.. கோரப்பிடியில் தலைநகர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் தான் அதிக அளவு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதனால் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. அதனால் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த மைக்ரோ ப்ளான் என்ற பெயரில் 9 திட்டங்களைச் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னைவாசிகள் வேறு எங்கும் செல்ல முடியாத வண்ணம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ராயபுரத்தில் 6 ஆயிரத்தை எட்டியது கொரோனா பாதிப்பு.. கோரப்பிடியில் தலைநகர்!

இந்த நிலையில் சென்னை கொரோனா பாதிப்பின் மண்டலவாரி விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 6148 பேரும் , தண்டையார்பேட்டையில் 4963 பேரும் , திரு.வி.க நகரில் 3440 பேரும் , அண்ணா நகரில் 4142 பேரும் தேனாம்பேட்டையில் 4785 பேரும் , கோடம்பாக்கத்தில் 4329 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 39,641 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதால் தலைநகரான சென்னை கொரோனாவில் இருந்து மீளுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. .