ராயபுரத்தில் 4000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.. சென்னை பாதிப்பின் மண்டலவாரி பட்டியல்!

 

ராயபுரத்தில் 4000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.. சென்னை பாதிப்பின் மண்டலவாரி பட்டியல்!

சென்னையில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. சென்னையில் மட்டுமே கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும், கொரோனா பரவுவது குறைந்ததாக இல்லை. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராயபுரத்தில் 4000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.. சென்னை பாதிப்பின் மண்டலவாரி பட்டியல்!

இந்த நிலையில் சென்னை கொரோனா பாதிப்பின் மண்டலவாரி விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 3,859 பேரும் , தண்டையார்பேட்டையில் 2,835 பேரும் , திரு.வி.க நகரில் 2,167 பேரும் , அண்ணா நகரில் 1974 பேரும் , தேனாம்பேட்டையில் 2,518 பேரும் , கோடம்பாக்கத்தில் 2,431 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 22,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.