கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ராயபுரம்..4 மண்டலங்களில் 2000ஐ எட்டியது கொரோனா தொற்று!

 

கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ராயபுரம்..4 மண்டலங்களில் 2000ஐ எட்டியது கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில் நேற்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டுமே நேற்று 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், நேற்று மட்டும் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு சென்னையில் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால், தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட முதல்வர் பழனிசாமி 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை நியமித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ராயபுரம்..4 மண்டலங்களில் 2000ஐ எட்டியது கொரோனா தொற்று!

இந்த நிலையில் சென்னை மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 3552 பேரும் , தண்டையார்பேட்டையில் 2470 பேரும் , திரு.வி.க நகரில் 1958 பேரும் , அண்ணா நகரில் 1784 பேரும் , தேனாம்பேட்டையில் 2245 பேரும் , கோடம்பாக்கத்தில் 2002 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மொத்தமாக 19,826 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு 3500ஐ எட்டிய நிலையில் தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம்,தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய 4 மண்டலங்களில் பாதிப்பு 2000ஐ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.