சென்னையில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா? 13,255 பேருக்கு கொரோனா சிகிச்சை!

 

சென்னையில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா? 13,255 பேருக்கு கொரோனா சிகிச்சை!

சென்னையில் கொரோனா பாதிப்பு ஆரம்பக்கட்டத்தில் பன்மடங்கு அதிகரித்திருந்தது. இதனால் சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு சென்னை மக்கள் எங்கும் செல்லாத வண்ணம் தடுக்கப்பட்டது. அதே போல சென்னை முழுவதும் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, 300 மக்களை கண்காணிக்க 1 அதிகாரி என நியமிக்கப்பட்டதோடு, நடமாடும் பரிசோதனை முகாம், வீடு வாரியாக பரிசோதனை என கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. சென்னையில் செயல்படுத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளின் விளைவாக தற்போது சென்னையில் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் கொரோனா சிகிச்சை விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா? 13,255 பேருக்கு கொரோனா சிகிச்சை!

அதில், சென்னையில் கொரோனா பாதித்த 1,26,677 பேரில் 13,255 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 1,10,819 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் கொரோனாவால் இதுவரை 2,603 பேர் உயிரிழந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 13,124 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அம்பத்தூர், கோடம்பாக்கம், அண்ணா நகர் பகுதிகளில் அதிகபட்சமான கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

சென்னையில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா? 13,255 பேருக்கு கொரோனா சிகிச்சை!

சென்னையில் கொரோனா சிகிச்சை 11 ஆயிரத்துக்கும் கீழ் இருந்த நிலையில், தற்போது 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்தே சென்னையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.