சென்னையில் 11,498 பேருக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை; முழு விவரத்தை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

 

சென்னையில் 11,498 பேருக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை; முழு விவரத்தை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு பெருந்தொற்றாக உருவெடுத்துள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு தமிழக அரசு பல்வேறு கட்ட அதிரடி நடவடிக்கைகளை கையாண்டது. அதன் விளைவாக தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்திருந்த நிலையில், தற்போது பெருமளவு கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படுள்ளது. அங்கு தினமும் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளுடன் ஓப்பிடுகையில், கொரோனா பாதிப்பு 7 முதல் 5 சதவீதத்திற்கு உள்ளாகவே இருக்கிறது.

சென்னையில் 11,498 பேருக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை; முழு விவரத்தை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு விவரங்களையும் மண்டலவாரி விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 11,498 பேருக்கு மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 1,02,698 பேர் குணமடைந்து விட்டதாகவும் இதுவரை 2,454 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதே போல நேற்று ஒரே நாளில் 11,375 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அம்பத்தூர், அண்ணா நகர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் பகுதிகளில் தான் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.