சென்னையில் 11,606 பேருக்கு கொரோனா சிகிச்சை: முழு விவரத்தை வெளியிட்டது மாநகராட்சி

 

சென்னையில் 11,606 பேருக்கு கொரோனா சிகிச்சை: முழு விவரத்தை வெளியிட்டது மாநகராட்சி

தமிழகத்தில் அதிகளவு கொரோனா பரவியது சென்னையில் தான். அங்கு கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியதன் மூலம் கொரோனா பாதிப்பு பெருந்தொற்றாக உருவெடுத்தது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரிப்பது, நடமாடும் பரிசோதனை முகாம் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் விளைவாக தற்போது சென்னையில் கொரோனா பரவல் குறைந்திருக்கிறது. மேலும் சிகிச்சை பெற்று வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

சென்னையில் 11,606 பேருக்கு கொரோனா சிகிச்சை: முழு விவரத்தை வெளியிட்டது மாநகராட்சி

இந்த நிலையில் சென்னையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் விவரங்களை சென்னை மாநகராட்சி மண்டலவாரியாக வெளியிட்டுள்ளது. அதில், மொத்தமாக கொரோனா உறுதியான 1,07,109 பேரில் 93,231 பேர் குணமடைந்து விட்டதாகவும் 11,606 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 2,272 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் 12,206 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.