சென்னையில் 12 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா சிகிச்சை : மாநகராட்சி

 

சென்னையில் 12 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா சிகிச்சை : மாநகராட்சி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்க அரசும் மாவட்ட நிர்வாகங்களும் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்து கொண்டிருப்பினும் பாதிப்பு குறைந்ததாக இல்லை. குறிப்பாக சென்னையில் தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. மக்கள் தொகை அதிகமாக இருப்பதாலும் கோயம்பேடு சந்தையில் கூட்டம் குவிந்ததாலும் கொரோனா அதிகளவில் பரவியதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது. மொத்தமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், 12 ஆயிரம் பேருக்கு மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டனர்.

சென்னையில் 12 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது கொரோனா சிகிச்சை : மாநகராட்சி

இந்த நிலையில் இன்றைய மண்டலவாரி சென்னை கொரோனா சிகிச்சை விவரத்தைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையில் கொரோனா உறுதியான 1,02,985 பேரில் 11,983 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 2,176 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் ஆண்கள் 59.17 சதவீதம் மற்றும் பெண்கள் 40.83 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 88,826 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளது.