சென்னையில் மீண்டும் தலைதூக்குகிறதா கொரோனா? சிகிச்சை விவரம் வெளியீடு!

 

சென்னையில் மீண்டும் தலைதூக்குகிறதா கொரோனா? சிகிச்சை விவரம் வெளியீடு!

தமிழகத்தின் கொரோனா பெருந்தொற்றாக உருவெடுத்த போது, அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் இணைந்து எடுத்த அதிரடி நடவடிக்கையால் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்தது. குறிப்பாக, சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பரிசோதனையை அதிகரித்ததால் இது சாத்தியமானது. அதனால் தற்போது சென்னை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையிலும், பாஸ் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளதால் அதிக மக்கள் சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர்.

சென்னையில் மீண்டும் தலைதூக்குகிறதா கொரோனா? சிகிச்சை விவரம் வெளியீடு!

அதனால் பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களை தனிமை படுத்த வேண்டும் என மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் தற்போது 12,256 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 1,05,494 பேர் குணமடைந்து விட்டதாகவும் நேற்று ஒரே நாளில் 12,525 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் மீண்டும் தலைதூக்குகிறதா கொரோனா? சிகிச்சை விவரம் வெளியீடு!

கடந்த சில நாட்களாக சென்னையில் 11 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை எட்டியுள்ளது. அதே போல, இ பாஸ் தளர்வு அளித்ததில் இருந்து தான் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலை தூக்குகிறதா என கேள்வி எழுந்துள்ளது.