சென்னையில் குறைந்து வருகிறது கொரோனா பாசிட்டிவ் விகிதம்.. முழு விவரம் உள்ளே!

 

சென்னையில் குறைந்து வருகிறது கொரோனா பாசிட்டிவ் விகிதம்.. முழு விவரம் உள்ளே!

தமிழகத்திலேயே அதிகளவில் பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்ற காலம் மாறி, சென்னைக்கு பிழைப்பதற்காக வந்தவர்களெல்லாம் உயிர் பிழைத்துக் கொள்ள சென்னையை விட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். அதுமட்டுமில்லாமல், சென்னை மக்களின் வாழ்வாதாரத்தை இந்த கொரோனா வைரஸ் முற்றிலுமாக புரட்டி போட்டது. ஒரு வழியாக கொரோனா பாதிப்பில் இருந்து சென்னை மீண்டு வருகிறது.

சென்னையில் குறைந்து வருகிறது கொரோனா பாசிட்டிவ் விகிதம்.. முழு விவரம் உள்ளே!

இந்த நிலையில் சென்னையில் செய்யப்படும் கொரோனா பரிசோதனைகளை ஒப்பிட்டு பார்க்கும் போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்ட தகவலின் படி கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி 14,027 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 986 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியானது. அதாவது பரிசோதனை செய்யப்பட்டதில் 7% பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியானது.

இந்த கொரோனா பாதிப்பு விகிதங்கள் கடந்த 7 ஆம் தேதி 8% ஆகவும், கடந்த 6 ஆம் தேதி 9.4% சதவீதமாகவும் இருந்தது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், இம்மாத இறுதிக்குள் சென்னையில் 6.5% ஆக கொரோனா பாதிப்பை குறைக்க வேண்டும் என்பதே இலக்காக வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.