எங்களால் சிகிச்சையளிக்க முடியவில்லை! நோயாளிகளை பிற மாவட்டங்களுக்கு அனுப்பும் சென்னை

 

எங்களால் சிகிச்சையளிக்க முடியவில்லை! நோயாளிகளை பிற மாவட்டங்களுக்கு அனுப்பும் சென்னை

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சுமார் 33 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையளிக்க போதிய வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகள் இல்லாததால் மாநில அரசு திணறிவருகிறது.

எங்களால் சிகிச்சையளிக்க முடியவில்லை! நோயாளிகளை பிற மாவட்டங்களுக்கு அனுப்பும் சென்னை

இந்நிலையில்சென்னையில் உள்ள கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்களை திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு அனுப்பி சிகிச்சை வழங்கும் திட்டம் குறித்தும் சுகாதாரத்துறை பரிசீலித்து வருதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவ கட்டமைப்புகளை மேலும் அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன. தனியார் கல்லூரிகளை தேவையைப் பொறுத்து கோவிட் பராமரிப்பு மையங்களாக பயன்படுத்தும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்குமாறு நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாநகரங்களுக்கு சற்று தள்ளி நல்ல கட்டமைப்புடன் 24 மணி நேர குடிநீர், மின்சார வசதிகளுடன் இருக்கும் கல்லூரிகள் முதல்கட்டமாக தயாராகி வருவதாக தெரிகிறது. பாசிட்டிவ் நபர்களை இடம் மாற்றுவது உறுதியாகும்பட்சத்தில் போக்குவரத்தில் இருக்கும் சவாலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.