‘மீண்டும் கோடம்பாக்கத்தில் வேகமெடுக்கும் கொரோனா’.. சிகிச்சை விவரத்தை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

 

‘மீண்டும் கோடம்பாக்கத்தில் வேகமெடுக்கும் கொரோனா’.. சிகிச்சை விவரத்தை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

சென்னையில் அதிகரித்திருந்த கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால், தளர்வுகள் அளிக்கப்பட்டன. பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்த சென்னை, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனிடையே இபாஸ் நடைமுறையிலும் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த எல்லாரும் மீண்டும் சென்னைக்கு வந்து கொண்டிருப்பதால், சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வெளிமாநிலங்கள் அல்லது வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் எல்லாரையும் தனிமைபடுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

‘மீண்டும் கோடம்பாக்கத்தில் வேகமெடுக்கும் கொரோனா’.. சிகிச்சை விவரத்தை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!

இந்த நிலையில் சென்னையின் கொரோனா சிகிச்சை விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், சென்னையில் தற்போது 12,287 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 1,06,626 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல நேற்று ஒரே நாளில் 12,660 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை 1,21,450 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா சிகிச்சையின் மண்டல நிலவரத்தின் படி கோடம்பாக்கத்தில் அதிகபட்ச சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.