கவச உடையில் கொரோனா வார்டுக்கு சென்று போலீசாரை நலம் விசாரித்த சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால்

கவச உடையில் கொரோனா வார்டுக்கு சென்று போலீசாரை நலம் விசாரித்த சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை கவச உடை அணிந்து சென்று கொரோனா வார்டில் நலம் விசாரித்தார் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்.

கவச உடையில் கொரோனா வார்டுக்கு சென்று போலீசாரை நலம் விசாரித்த சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால்

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக நல்ல பலனாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்த பேரிடர் காலத்திலும் தங்கள் உயிரை துச்சமென்று நினைத்து முன்கள பணியாளர்கள் பலர் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை அளித்து வருகிறார்.அத்துடன் முன்களப்பணியாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் கொரோனா கவச உடை அணிந்து நோயாளிகளை சந்தித்தார்.

கவச உடையில் கொரோனா வார்டுக்கு சென்று போலீசாரை நலம் விசாரித்த சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால்

இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறை மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்று தனியாக கொரோனா சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. அங்கு 82 காவலர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கவச உடை அணிந்து சென்று நலம் விசாரித்தார்.

அத்துடன் அவர்களுக்கு பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சத்துணவு தொகுப்பினையும் வழங்கினார். அதேபோல் சென்னை எழும்பூர் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவலர்களையும் நேரில் சந்தித்தார்.