ஊரடங்கு விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை-காவல் ஆணையர்

 

ஊரடங்கு விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை-காவல் ஆணையர்

ஊரடங்கை மீறி அத்துமீறலில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊரடங்கு விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை-காவல் ஆணையர்

சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் அம்மா மாளிகையில் நடைபெற்ற மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி , காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், “ஊரடங்கில் பல தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன , தளர்வுகள் வழங்கப்பட்டாலும் பொது இடங்களில் முகக் கவசம் அணிதலும், தனி நபர் இடைவெளியை பின்பற்றுதலும் அவசியம் என அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளது. மண்டல வாரியாக செயல்படும் ஊரடங்கு அமலாக்க குழுவை ஒவ்வொரு மண்டலத்திற்கு மூன்றாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இந்த குழுவை விழிப்புணர்வு தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்த உள்ளோம். இக்குழு விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு முதலில் எச்சரிக்கை விடுப்பர், தொடர்ந்து விதிகளை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். காவல்துறையினருக்கு பொதுமக்கள் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ஊரடங்கில் அத்துமீறுலில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.