‘இதில் சீனாவை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு’ : சென்னை காவல் ஆணையர் சொல்லும் அதிர்ச்சி தகவல்!

‘இதில் சீனாவை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு’ : சென்னை காவல் ஆணையர் சொல்லும் அதிர்ச்சி தகவல்!

ஆன்லைன் கடன் மோசடி விவகாரத்தில் சீனாவை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

‘இதில் சீனாவை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு’ : சென்னை காவல் ஆணையர் சொல்லும் அதிர்ச்சி தகவல்!

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி கடன் பெற வேண்டாம். மொபைலில் வரும் ஆப்ஷனை தெரியாமல் கிளிக் செய்தால் கூட, மொபைலில் இருக்கும் அனைத்து விவரங்களையும் எடுத்துக் கொள்வார்கள். லோன் ஆப்-களை உபயோகிக்க வேண்டாம். இதில் சீனாவில் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருக்கிறது. அவர்களுள் 2 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களது சாதனங்கள் மற்றும் பேங்க் அக்கவுண்ட் விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன’ என்று கூறினார்.

‘இதில் சீனாவை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு’ : சென்னை காவல் ஆணையர் சொல்லும் அதிர்ச்சி தகவல்!

மேலும், ‘இதில் சம்பந்தப்பட்டிருக்கும் நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆப் மூலம் கடன் வாங்கி திரும்ப செலுத்தவில்லை என்றால், கடன் பெற்றவர்களை பற்றி தவறாக அவரது மொபைலில் இருக்கும் அனைத்து எண்களுக்கும் கால் செய்தும், மெசேஜ் அனுப்பியும் தொந்தரவு செய்கிறார்கள்’ என்றும் கூறினார். அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் கடன் பெறுவது மூலம் மோசடிகள் அதிகரிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கும் நிலையில், அதனை பயன்படுத்த வேண்டாம் என ஆர்.பி.ஐ எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது நினைவு கூரத்தக்கது.