சென்னையில் கொரோனா பரிசோதனை திருப்பு முனையாக அமைந்துள்ளது; மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

 

சென்னையில் கொரோனா பரிசோதனை திருப்பு முனையாக அமைந்துள்ளது; மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. அதனால் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. அதனால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கொரோனா பரிசோதனை அதிகமாக செய்யப்படுவதால் தான் தற்போது சென்னையில் பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் கொரோனா பரிசோதனை திருப்பு முனையாக அமைந்துள்ளது; மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

இந்த நிலையில் சென்னையில் கொரோனா விழுப்புணர்வு வாகனங்களை தொடக்கி வைத்த பின்னர் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் கொரோனா பரிசோதனை திருப்பு முனையாக அமைந்துள்ளதாகவும் ஒரு நாளைக்கு 12,000 பரிசோதனை செய்யப்படுவதாகவும் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சந்தேக வார்டு பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், பரிசோதனைக்கு முன்னர் கொரோனா அறிகுறி இருந்தால் சந்தேக வார்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.