`எப்போதும் செல்போனில் விளையாட்டு; கண்டித்த தாய்மாமன்!;- உயிரை விட்ட கல்லூரி மாணவி

 

`எப்போதும் செல்போனில் விளையாட்டு; கண்டித்த தாய்மாமன்!;- உயிரை விட்ட கல்லூரி மாணவி

ஊரடங்கால் வீட்டில் முடங்கிக் கிடந்த கல்லூரி மாணவி எப்போதும் செல்போனை வைத்து விளையாடியதால் தாய்மாமன், அவரை கண்டித்ததோடு, செல்போனை பறித்துக்கொண்டார். இதனால் வேதனை அடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

`எப்போதும் செல்போனில் விளையாட்டு; கண்டித்த தாய்மாமன்!;- உயிரை விட்ட கல்லூரி மாணவி

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவில் உள்ள ஸ்ரீராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் மதுமிதா, மகன் சுரேஷ் கிருஷ்ணா. சுரேஷ் கிருஷ்ணா 2 வயதாக இருக்கும் போது அம்மாவை இறந்துவிட்டார். தந்தை ராஜேந்திரன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். ஆதரவின்றி தவித்த மதுமிதா, சுரேஷ் கிருஷ்ணாவை குழந்தைகளிலிருந்து அவரின் தாத்தா, பாட்டி வளர்த்தனர். அவர்களின் மறைவுக்குப்பிறகு இருவரும் சென்னையில் உள்ள தாய்மாமன் வீட்டில் வளர்ந்தனர்.

கீழ்கட்டளை, துரைராஜ்நகரில் உள்ள தாய்மாமன் வீட்டில் தங்கியிருந்த சுரேஷ்கிருஷ்ணா (18). இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்துவருகிறார். சகோதரி மதுமிதா (21), நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவந்தார். ஊரடங்கு காரணமாக கல்லூரிக்குச் செல்லாமல் இருவரும் வீட்டிலேயே இருந்தனர். அப்போது மதுமிதா, செல்போனில் கேம்ஸ் விளையாடுவதும் சேட்டிங் செய்வதுமாகவும் இருந்துள்ளார். மேலும் போனில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்துள்ளார். அதை தாய்மாமனும் தம்பியும் கண்டித்துள்ளனர். அதன்பிறகும் மதுமிதா செல்போனிலேயே நேரத்தை செலவழித்துவந்துள்ளார்.

`எப்போதும் செல்போனில் விளையாட்டு; கண்டித்த தாய்மாமன்!;- உயிரை விட்ட கல்லூரி மாணவி

இதனால் கோபம் அடைந்த தாய்மாமன், மதுமிதாவின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டார். அதனால் வேதனையடைந்த மதுமிதா, வீட்டில் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்துவந்துள்ளார். கடந்த 26-ம் தேதி குளிப்பதற்காக குளியல் அறைக்குள் அவர் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த மதுமிதாவின் தாய்மாமன் மற்றும் தம்பி சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் கதவை தட்டியுள்ளனர். அப்போது மதுமிதாவிடமிருந்து எந்தப்பதிலும் வரவில்லை. அதனால் கதவை உடைத்து உள்ளே சென்ற தாய்மாமன், சுரேஷ் கிருஷ்ணா ஆகியோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குளியலறையில் மதுமிதா, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக மதுமிதாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மதுமிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து தகவலறிந்ததும் மடிப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் வழக்கு பதிந்து விசாரித்துவருகிறார். பிரேத பரிசோதனைக்குப்பிறகு மதுமிதாவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தையும், தாயையும் இழந்த சுரேஷ் கிருஷ்ணாவுக்கு சகோதரி மதுமிதாதான் ஆறுதலாக இருந்துள்ளார். சகோதரியின் இறப்பை தாங்க முடியாமல் சுரேஷ் கிருஷ்ணா தற்போது தவிக்கிறார். சகோதரியை இழந்து தவிக்கும் சுரேஷ்கிருஷ்ணாவுக்கு நண்பர்கள் ஆறுதல் படுத்தினர். செல்போன் மோகத்தால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் கீழ்கட்டளை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.