சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் இன்று முதல் திறப்பு!

 

சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் இன்று முதல் திறப்பு!

கொரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் இன்று முதல் திறக்கப்படுகிறது.

சென்னையில் குறைவாகவே இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியதன் காரணமாக பெருந்தொற்றாக உருவெடுத்தது. கோயம்பேடு வியாபாரிகள் மூலம் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மூலமாக மற்ற வியாபாரிகள், பொதுமக்கள், காய்கறி இறக்குமதி செய்ய வந்தவர்கள் என பன்மடங்காக பாதிப்பு அதிகரித்தது. இதனால் அந்த சந்தை மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை தொடங்கப்பட்டது. மேலும், பழ மார்க்கெட் மாதாவர சந்தைக்கு மாற்றப்பட்டது.

சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் இன்று முதல் திறப்பு!

இருப்பினும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 5ஆம் தேதி மூடப்பட்ட கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க கோரி வணிகர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் இன்று முதல் திறப்பு!

இந்நிலையில் சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் நான்கு மாதங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. மே 5ம் தேதி மூடப்பட்ட உணவு தானிய மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று இன்று திறக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக கோயம்பேடு காய்கறி,கனி, மலர் மார்க்கெட்டுகள் வரும் 28 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.