`தந்தையின் அலட்சியம்; குழந்தையின் உயிரைப் பறித்த ஹீட்டர்!’- சென்னையில் சோகம்

 

`தந்தையின் அலட்சியம்; குழந்தையின் உயிரைப் பறித்த ஹீட்டர்!’- சென்னையில் சோகம்

குளிப்பதற்கு தண்ணீர் சுடவைக்கும் ஹீட்டரிலிருந்து மின்சாரம் பாய்ந்து 4 வயது சிறுமி பலியான சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. தந்தையின் அலட்சியத்தால் குழந்தையின் பறிபோய் உள்ளது.

`தந்தையின் அலட்சியம்; குழந்தையின் உயிரைப் பறித்த ஹீட்டர்!’- சென்னையில் சோகம்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஏழுமலை – வசந்தி தம்பதி சென்னை கண்ணகிநகர் பகுதியில் வசித்து வருகின்றனர்.  இவர்கள் வீட்டில் குளிப்பதற்காக தண்ணீர் சுட வைப்பதற்காக மின்சார ஹீட்டரை பயன்படுத்தியுள்ளனர். தண்ணீர் தேவையான அளவு சூடானதும் ஹீட்டர் ஸ்சுவிட்ச்சை ஆப் செய்யாமல் எடுத்து ஓரம் வைத்துவிட்ட ஏழுமலை குளிக்க சென்றுவிட்டார்.

அப்பொழுது அங்கு விளையாடி கொண்டிருந்த ஏழுமலையின் 4 வயது சிறுமி யாஷினி கை ஹீட்டர் மேல் பட்டவுடன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடனடியாக யாஷினியை அருகில் உள்ள மாநகராட்சி அரசு மருத்துவமனைக்கு ஏழுமலை கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் இல்லை என்று அங்கிருந்த ஊழியர்கள் அலட்சியமாக கூறியுள்ளனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த யாஷினியை அங்கிருந்து அனுப்பிவிட்டனர்.

இதையடுத்து, யாஷினியை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ஏழுமலை கொண்டு சென்றார். ஆனால் போகும் வழியிலேயே யாஷினி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கண்ணகிநகர் ஆய்வாளர் வீரக்குமார், சிறுமி யின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

`தந்தையின் அலட்சியம்; குழந்தையின் உயிரைப் பறித்த ஹீட்டர்!’- சென்னையில் சோகம்

கண்ணகிநகர் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி அரசு மருத்துவமனை இருந்தும் மக்கள் உயிரை காப்பாற்ற முடியாத சூழலில் உள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு யாரேனும் சென்றால் பெரிய மருத்துவர் இல்லையென்று திருப்பி அனுப்புகின்றனர். இதே காரணத்தால் இங்கு பலரும் பலியாகியுள்ளதாகவும் சுமார் 1 லட்சம் மக்கள் வசிக்கும் இந்த பகுதியில் மருத்துவமனை மட்டும் பெரிதளவில் கட்டிவைத்து விட்டு மருத்துவரை 24 மணி நேரமும் பணியமர்த்தாததால் மருத்துவமனை பயனில்லாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

குழந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.