அறையில் துர்நாற்றம்… `ஷாக்’கான உறவினர்கள்!-கொரோனா அச்சத்தால் உயிரை மாய்த்த தனியார் ஊழியர்?

 

அறையில் துர்நாற்றம்… `ஷாக்’கான உறவினர்கள்!-கொரோனா அச்சத்தால் உயிரை மாய்த்த தனியார் ஊழியர்?

சென்னை மதுரவாயல் பகுதியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் கொரோனா அச்சத்தால் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பூட்டிய அறைக்குள் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அறையில் துர்நாற்றம்… `ஷாக்’கான உறவினர்கள்!-கொரோனா அச்சத்தால் உயிரை மாய்த்த தனியார் ஊழியர்?

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த நிக்கில் டேவிஸ் என்ற 32 வயது வாலிபர் மதுரவாயல், வரலட்சுமி நகர் மெயின் ரோடு பகுதியில் உள்ள அறையில் தங்கியிருந்து அண்ணாநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சில நாட்களாக நிக்கில் டேவிஸ் அறை பூட்டியே கிடந்தது. அவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரின் உறவினர்கள், நிக்கில் அறைக்கு வந்துள்ளனர். அப்போது துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து கோயம்பேடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அழுகிய நிலையில் நிக்கில் டேவிஸ் உடல் கிடந்தது. இதைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, நிக்கல் டேவிஸ் தங்கியிருந்த அறையை காவல்துறையினர் சோதனை செய்தனர். எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. காவல்துறையினர் பின்னர் நடத்திய தீவிர விசாரணையில், நிக்கில் டேவிஸிக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். டாக்டர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி அவரிடம் அறிவுறுத்தியுள்ளனர். அதன்பின் வீட்டிற்கு வந்த நிக்கில் டேவிஸ், தன்னுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளார். அதன்பிறகுதான் அவர் உயிரிழந்துள்ளார்.

அறையில் துர்நாற்றம்… `ஷாக்’கான உறவினர்கள்!-கொரோனா அச்சத்தால் உயிரை மாய்த்த தனியார் ஊழியர்?

அவர் எப்படி உயிரிழந்தார் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தனக்கு கொரோனா வந்துவிட்டதோ என்ற அச்சத்தால் உயிரிழந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நிக்கில் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளுக்கு பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிந்துவிடும் என்று காவல்துறையினர் கூறினர். மேலும், நிக்கில் டேவிஸ் குறித்து அவரின் உறவினர்களிடம் விசாரித்து வரும் காவல்துறையினர், அவரது செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர். அவருக்கு வந்த போன் அழைப்புகள் குறித்தும் விசாரணை நடந்துவருகிறது.

இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, “ஆந்திராவை சேர்ந்த நிக்கில் டேவிஸ் வேலை காரணமாக மதுரவாயல் வந்துள்ளார். அங்கு அறை எடுத்து தங்கி வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. கொரோனா பரிசோதனை செய்யும்படி டாக்டர் கூறியுள்ளார். தனக்கு கொரோனா வந்துவிட்டதோ என்ற பயத்தில் அவர் உயிரிழந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சடலத்தை தனிமனித கவச உடையணிந்து முன்எச்சரிக்கையுடன் மீட்டோம். நிக்கில் எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் தெரிந்துவிடும்” என்றனர்.