“12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து” அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை!

“12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து”   அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை!

கல்வித் தொலைக்காட்சி தொடர்ந்து இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

“12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து”   அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை!

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்ணா நூலகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” அமைச்சராக பொறுப்பேற்றவுடன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தான் முதல் ஆய்வு நடத்தியுள்ளேன். அண்ணா நூலகத்தில் அண்ணா, கருணாநிதி படம் கூட இல்லை அரசியல் செய்துள்ளனர். சென்னை அண்ணா நூலகம் பராமரிப்பில்லாமல் இருக்கிறது. 10 ஆண்டுகளில் நடந்த பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளேன்.தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம் . பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் குறித்து அதிகாரிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் . பள்ளி கட்டணம் குறித்து அதிகாரிகள் -பெற்றோர் குழு அமைத்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் ” என்றார்.

“12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து”   அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை!

இதனிடையே 12 ஆம் வகுப்பு தேர்வு ரத்து தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார். அத்துடன் பள்ளி கல்வி கட்டணம், மாணவர்களின் ஆன்லைன் கல்வி குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.