சென்னை விமான நிலையம் மூடல் – நிவர் புயல் எதிரொலி

 

சென்னை விமான நிலையம் மூடல் – நிவர் புயல் எதிரொலி

கடலில் உருவாகியிருக்கும் புயல் காரைக்கால் – மாமல்லபுரத்திற்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் திசையில் சிறிய மாறுதல்கள் இருக்கக்கூடும். கடைசியாக வந்த தகவலின் படி நிவர் புயர் புதுச்சேரி அருகே இன்றிரவு கரையைக் கடக்கும் என வானிலை மையத்தினர் கணித்துள்ளனர்.

சென்னையில் நேற்று முதலே கனத்த மழை பெய்துவருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியும், வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி அதன் கொள்ளளவை நெருங்கியதால், இன்று மதியம் 12 மணிக்கு அது 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சென்னை விமான நிலையம் மூடல் – நிவர் புயல் எதிரொலி

எங்குப் பார்த்தாலும் நிவர் புயல் குறித்த செய்திகளே நிரம்பியிருக்கின்றன. சென்னையிலிருந்து பல சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் போக்குவரத்து முடக்கபட்டுள்ளது. அதேபோல சென்னை ஈசிஆர் சாலை மூடப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை உள்ளிட்ட சில இடங்களுக்குச் செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதன் நீட்சியாக, சென்னை விமான நிலையத்தின் சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

சென்னை விமான நிலையம் மூடல் – நிவர் புயல் எதிரொலி

நிவர் புயலின் எதிரொலியாக இன்று இரவு 7 மணியிலிருந்து நாளை காலை 7 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது. அதனால், விமானங்கள் புறப்படவோ, தரையிறங்கவோ செய்யப்பட மாட்டாது.

புயலினால் காற்று வீசுவது வேகமாக இருப்பதாலும், ஓடுபாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதாலும் இந்த முடிவை எடுத்திருப்பதாக விமான நிலைய தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

நாளை காலை 7 மணிக்கும் அப்போதய சூழலை கவனத்தில் கொண்டே விமான சேவை தொடங்குவது குறித்த முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.