கேரளா சொப்னாவே அசந்து போகும் ஐடியா -எலெக்ட்ரிஷியன் தங்கத்தை எப்படி கடத்திட்டு வந்தாரு பாருங்க

 

கேரளா சொப்னாவே  அசந்து போகும் ஐடியா -எலெக்ட்ரிஷியன் தங்கத்தை எப்படி கடத்திட்டு வந்தாரு பாருங்க

துபாயில் வேலை பார்த்து விட்டு கொரானா காரணமாக வேலையிழந்த ஒரு எலெக்ட்ரிஷியன் நூதனமான முறையில் புது டெக்னீக்கை பயன்படுத்தி74 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.45 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர் .

Image


சென்னை விமான நிலையத்துக்கு துபாயிலிருந்து இண்டிகோ விமானத்தில் வந்த ஒரு பயணியின் உடைமைகளின் மீது சனியன்று சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்த அதை பிரித்து பார்த்தனர் .அப்போது அவரின் பெட்டிக்குள் பல படுக்கை விரிப்புகளும் ,சில பொம்மைகளும் இருந்தன .அவையெல்லாம் பார்ப்பதற்கு சாதாரணமாக தெரிந்தாலும் வழக்கத்திற்கு மாறான எடை அதிகமாக இருந்தது .இதனால் அதிகாரிகள் அந்த பெட் ஸ்ப்ரெட் மற்றும் பொம்மைகளை சோதனையிட்டபோது அதற்குள் தங்கம் வைத்து கடத்தி வரப்பட்டதை கண்டுபிடித்தனர் .ஆனால் அவர்களாலும் சாதாரணமாக அதை கண்டுபிடிக்க முடியவில்லை .படுக்கை விரிப்புகளுக்குள் வைத்து தெரியாமல் அவையில் தைக்கப்பட்டிருந்ததால் அவர்களால் எளிதாக அதை கண்டுபிடிக்கமுடியாமல் தினறினாரகள் .இருந்தாலும் எடை அதிகமாக இருந்ததால் அவர் சிக்கிக்கொண்டார் .இந்த தங்க கடத்தல் இதுதான் முதன்முறையா அல்லது இப்படி பலமுறை அவர் கடத்தி வந்துள்ளாரா இதற்கு பிண்ணனியில் வேறு யாராவது பெரிய புள்ளிகளின் தொடர்பு உள்ளதா என்று சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

Image