சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்!

 

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்!

பிரபல புற்றுநோய் மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது (93)

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்!

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவராக கடந்த 20 ஆண்டுகளாகஅரும்பணியாற்றியவர் சாந்தா. டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டியால் புற்றுநோய் மருத்துவ சேவைக்கு அழைத்து வரப்பட்டவர். ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க உதவிய இவர், மருத்துவமனை வளாகத்திலேயே தங்கி சிகிச்சை அளித்து வந்தார். அடையாறு புற்றுநோய்க் கழகத்திலே 1955 ஆம் ஆண்டில் பணியில் இணைந்த இவர், அதில் பல முக்கிய பதவிகளில் பணியாற்றினார். 1980 முதல் 1997 வரை அதன் இயக்குநராகப் பணியாற்றினார். உலக சுகாதார அமைப்பில் சுகாதாரம் குறித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் அங்கம் வகித்தார். இவர் தனது மருத்துவ பணிக்காக மகசேசே விருது, பத்மஸ்ரீ , பத்ம விபூஷண் போன்ற புகழ்பெற்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார்!

இந்நிலையில் 93 வயதான மருத்துவர் சாந்தா உடல்நல குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மருத்துவர் சாந்தாவின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.