இடைஞ்சலாக பார்க்காதீர்… இது காவல்துறையின் கடமை – பிரதீப் குமார்

 

இடைஞ்சலாக பார்க்காதீர்… இது காவல்துறையின் கடமை – பிரதீப் குமார்

சென்னை கீழ்ப்பாக்கம் அருகே சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் 115 இடங்களில் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது. மக்களின் நலனுக்காகவே நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் தண்ணீரில் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இடைஞ்சலாக பார்க்காதீர்… இது காவல்துறையின் கடமை – பிரதீப் குமார்

தொடர்ந்து பேசிய அவர், இ பாஸ் பதிவு இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது காவல் துறையினரையினரின் கடமை. அதை பொதுமக்கள் இடைஞ்சலாக பார்க்காமல் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை செல்ல தனிப்பாதை அமைக்க பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், ஊரடங்கு தளர்வால் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இருப்பினும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் மக்களை உடனடியாக அனுப்புமாறு அனைத்து காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.