மணலியில் இருந்து ஐதராபாத் நோக்கிப் புறப்பட்ட 10 அமோனியம் நைட்ரேட் கண்டெய்னர் லாரிகள்!

மணலியில் இருந்து ஐதராபாத் நோக்கிப் புறப்பட்ட 10 அமோனியம் நைட்ரேட் கண்டெய்னர் லாரிகள்!

சென்னை மணலியில் வைக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட் வெடி மருந்தை ஐதராபாத்துக்கு அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக 10 லாரிகள் மூலம் அமோனியம் நைட்ரேட் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மணலியில் இருந்து ஐதராபாத் நோக்கிப் புறப்பட்ட 10 அமோனியம் நைட்ரேட் கண்டெய்னர் லாரிகள்!
லெபனான் தலைநகர் பைரூட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடி மருந்து கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். பல லட்சம் மக்கள் வீடிழந்துள்ளனர்.

மணலியில் இருந்து ஐதராபாத் நோக்கிப் புறப்பட்ட 10 அமோனியம் நைட்ரேட் கண்டெய்னர் லாரிகள்!
அதே போன்று ஒரு நிகழ்வு சென்னையில் நடைபெற வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், மணலியில் மிகவும் பாதுகாப்பான முறையில் 740 டன் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டுள்ளது என்று சுங்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடத்திய ஆய்வில் சுங்கத்துறை கிடங்கில் இருந்து 700 மீட்டர் தொலைவில் குடியிருப்பு உள்ளது தெரியவந்தது. எனவே, உடனே அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று சுங்கத் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மணலியில் இருந்து ஐதராபாத் நோக்கிப் புறப்பட்ட 10 அமோனியம் நைட்ரேட் கண்டெய்னர் லாரிகள்!
அமோனியம் நைட்ரேட் உரம் தயாரிக்கவும், வெடி மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது. நிலக்கரி சுரங்கங்களில் வெடி வைக்க அதிக அளவில் இது இறக்குமதி செய்யப்படுகிறது. மணலியில் மொத்தம் 37 கண்டெய்னர்களில் அமோனியம் நைட்ரேட் உள்ளது.
ஆன்லைனில் டெண்டர் கோரி இதை விற்பனை செய்ய உள்ளதாக சுங்கத்துறை கூறியது. ஆனாலும் தமிழக அரசு அனுமதி அளிக்காததைத் தொடர்ந்து அவற்றை தற்போது ஐதராபாத்தில் உள்ள கிடங்கிற்கும் மாற்றும் பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மணலியில் இருந்து ஐதராபாத் நோக்கிப் புறப்பட்ட 10 அமோனியம் நைட்ரேட் கண்டெய்னர் லாரிகள்!
முதல் கட்டமாக 10 கண்டெய்னர் லாரிகளில் அமோனியம் நைட்ரேட் ஐதராபாத் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மற்ற கண்டடெய்னர்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், மணலி மற்றும் சுற்றுவட்டார மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.