செங்கல்பட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா; 27 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு!

 

செங்கல்பட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா; 27 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு!

செங்கல்பட்டு மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்ததால், மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கியது. மக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டு பொதுப்போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது. இதனால் பலர் வேலையிழக்கும் சூழலும் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சேவைகளை தொடங்குமாறு பல தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

செங்கல்பட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா; 27 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு!

இதனையடுத்து, 5 மாதங்களுக்கு பிறகு பேருந்துகள், மால்கள், வழிபாட்டு தலங்கள், படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் தொடங்க அரசு அனுமதி அளித்தது. அதன் படி இன்று அரசு அனுமதி அளித்துள்ள அனைத்து சேவைகளும் தொடங்கியுள்ளன. இதனிடையே சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன. அம்மாவட்டத்தில் மேலும் 320 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 26,429 ஆக அதிகரித்துள்ளது.