நிரம்பும் தருவாயில் செம்பரம்பாக்கம் ஏரி; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

 

நிரம்பும் தருவாயில் செம்பரம்பாக்கம் ஏரி; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை தாண்டியது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, கிருஷ்ணா நதி நீர் வருகை மற்றும் தொடர் மழையின் காரணமாக நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் தற்போது 20.13 அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 390 கனஅடி நீர் வந்துகொண்டுள்ள நிலையில், ஏரியின் மொத்த கொள்ளளவு 2 ஆயிரத்து 636 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது.

நிரம்பும் தருவாயில் செம்பரம்பாக்கம் ஏரி; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடி என்ற போதிலும், ஏரியின் பாதுகாப்பு கருதி 21 அடியை தொட்டவுடன் உபரிநீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது நீர்மட்டம் 20 அடியை கடந்த நிலையில், ஏரி எந்த நேரத்திலும் நிரம்பும் என்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிகை நடவடிக்கையாக, பொதுமக்கள் யாரும் உள்ளே நுழையாத வகையில் ஏரிக்கு செல்லும் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு உள்ளது.

நிரம்பும் தருவாயில் செம்பரம்பாக்கம் ஏரி; அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

மேலும், கடந்த 2015ஆம் ஆண்டு பெரு வெள்ளத்தை போன்று நிகழாமல் தடுக்க, நீர்மட்டம் உயர உயர தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படும்போது, பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.