• December
    12
    Thursday

Main Area

Main



14 நிமிட காட்சியை  ஒரு டேக்கில் நடித்து அசத்திய அமிதாப்! குவியும் பாராட்டுக்கள்! 

அமிதாப்பச்சன்
அமிதாப்பச்சன்

சென்னை: நடிகர் அமிதாப்பச்சன் 14 நிமிட நீளக்காட்சியை ஒரே ஷாட்டில் நடித்து அசத்தியுள்ளார்.

இயக்குநர் ரூமி ஜாஃப்ரியின் இயக்கத்தில் உருவாகிவரும் 'சேரே' என்ற இந்தி திரைப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடித்து வருகிறார். ஆனந்த் பண்டிட் தயாரிக்கும் இதில் அமிதாப்பச்சன் வழக்கறிஞராக நடிக்கிறார். மேலும் இதில் இம்ரான் ஹாஸ்மி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பின், கடைசி காட்சி ஜூன் 16 ஆம் தேதி எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வு கூறி நடிகர் ரசூல் பூக்குட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். 

அகில் 'நடிகர் அமிதாப்பச்சன் அவர்கள், இந்திய சினிமாவில் மற்றொரு வரலாற்றை பதிவு செய்துள்ளார். ‘சேரே’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின், கடைசி நாள் அவர் ஒரே ஷாட்டில் பதினான்கு நிமிட நீள காட்சியை நடித்தார், ஒட்டுமொத்த படக்குழுவினரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்... டியர் சார், சந்தேகமே இல்லை, நீங்கள் உலகில் சிறந்த மனிதர்களில் ஒருவர்' என்று அமிதாப்பச்சனை புகழ்ந்துள்ளார்.

இது தவிரத் தமிழில் உருவாகி வரும் 'உயர்ந்த மனிதன்' திரைப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

2018 TopTamilNews. All rights reserved.